பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,883 கனஅடி; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,591 கனஅடியாக சரிவு

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,883 கன அடியாக உள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.95 அடி; அணையில் இருந்து வினாடிக்கு 2,800 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்ட உள்ளதால் இன்று பிற்பகலில் உபரிநீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,769 கனஅடியில் இருந்து 7,591 கனஅடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக விநாடிக்கு 18,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. டெல்டா பாசனத்துக்காக 18,000 கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாயில் 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.80 அடியாக சரிவு; நீர் இருப்பு 91.56 டிஎம்சியாக உள்ளது.

Related Stories: