ஈரோடு மாவட்டம் போலி மதுபாட்டில்களை விற்பனைக்காக கடத்தி வந்த 7 பேர் கொண்ட கும்பல் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் போலி மதுபாட்டில்களை விற்பனைக்காக கடத்தி வந்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். சரக்கு லாரியில் ரகசிய அறை அமைத்து பெட்டிப் பெட்டியாக மதுபாட்டில்களை கடத்தியது விசாரணையில் தெரியவந்தது. புதுச்சேரியில் இருந்து காரில் வந்த 3 பேரை பிடித்த போலீஸ், அவர்களிடம் இருந்து 384 பாட்டில்களை பறிமுதல் செய்தது. பிடிபட்ட 3 பேர் அளித்த தகவலின்பேரில் சரக்கு லாரியை பிடித்து சோதனை செய்தபோது 2,016 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

The post ஈரோடு மாவட்டம் போலி மதுபாட்டில்களை விற்பனைக்காக கடத்தி வந்த 7 பேர் கொண்ட கும்பல் கைது appeared first on Dinakaran.

Related Stories: