×

காஷ்மீர் எல்லையில் 67 வெடிக்காத குண்டுகள் பாதுகாப்பாக செயலிழப்பு

ஜம்மு: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பகுதிகளில் பாகிஸ்தானால் வீசப்பட்டு வெடிக்காத நிலையில் உள்ள குண்டுகளை கண்டுபிடிக்கும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், பூஞ்ச் மாவட்டத்தில் வெடிக்காத குண்டுகளை கண்டுபிடித்து அழிக்கும் பணியில் வெடிகுண்டு செயலிழக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 67 வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக செயலிழக்கப்பட்டன என்றார்.

The post காஷ்மீர் எல்லையில் 67 வெடிக்காத குண்டுகள் பாதுகாப்பாக செயலிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kashmir border ,Jammu ,Indian Army ,Pakistan ,Operation Sindh ,Poonch district ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்...