நாளை நடக்கிறது சென்னை ஐஐடி.யின் 60வது பட்டமளிப்பு விழா

சென்னை: சென்னை ஐஐடியின் 60வது பட்டமளிப்பு விழா, ஐஐடி வளாகத்தில் நாளை நடக்கிறது. விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். ஐஐடியின் 60வது பட்டமளிப்பு விழா ஐஐடி வளாகத்தில் உள்ள மாணவர்கள் செயற்பாட்டு மையத்தில், நாளை காலை 11 மணி அளவில் நடக்கிறது. விழாவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தனஞ்செய் ஒய்.சந்திரசூட் முதன்மை விருந்தினராக பங்கேற்கிறார். சென்னை ஐஐடியின் நிர்வாக குழுவின் தலைவர் டாக்டர் பவன் கோயங்கா பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார். சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி, திட்ட அறிக்கை சமர்ப்பிக்கிறார்.

The post நாளை நடக்கிறது சென்னை ஐஐடி.யின் 60வது பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: