கிருஷ்ணகிரி, மே 29: கிருஷ்ணகிரியில் நடந்து வரும் 5ம் கட்ட நீச்சல் பயிற்சியில் 67 பேர் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், நீந்தக் கற்றுக் கொள்வதற்கான முதல் கட்ட பயிற்சியில் 16 பேரும், இரண்டாம் கட்டமாக 61 பேரும், மூன்றாம் கட்டமாக 101 பேரும், நான்காம் கட்டமாக 83 பேரும் நீச்சல் பயிற்சி பெற்றனர். தற்போது 5ம் கட்ட நீச்சல் பயிற்சி கடந்த 23ம் தேதி துவங்கியது. இந்த பயிற்சி வருகிற ஜூன் 3ம் தேதி வரை நடக்கிறது. இதில், 42 மாணவர்கள், 25 மாணவிகள் என மொத்தம் 67 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.
அதன்படி ஐந்து கட்டமாக நடந்த நீச்சல் பயிற்சியில், மொத்தம் 339 பேர் பயிற்சி பெற்றுள்ளதாக, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தாங்களாகவே குளம், குட்டை, கிணறு மற்றும் ஆற்றில் நீச்சல் பயிற்சி அளிக்க வேண்டாம் என்றும், முறையாக பயிற்சியாளர்களால் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் மட்டும் நீச்சல் பயிற்சி கற்றுக்கொள்ள வேண்டும் எனவும், மேலும் விவரங்களுக்கு நீச்சல் குள அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.
The post 5ம் கட்ட நீச்சல் பயிற்சி தொடக்கம் appeared first on Dinakaran.