சென்னை: 4.20 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் இன்று மாலை சென்னை வருகின்றன. சென்னை விமான நிலையத்துக்கு மாலை 5.20 மணிக்கு வரவுள்ளது என்று சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை குறைக்கும் விதமாகவும் அதனை கட்டுப்படுத்தும் விதமாகவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் இருக்கக்கூடியவர்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்து கொரோனா டீ தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தற்பொழுது கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. வகையில் இன்று மாலை 5.30 மணியளவில் கொரோனா தடுப்பூசி 4.20 லட்சம் டோஸ்கள் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கொரோனா தடுப்பூசி செலுத்தக்கூடிய குப்பிகள் வருவதற்கு தாமதமாகி கொண்டிருக்கிறது. மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை என்ற காரணத்தினால் இன்னும் 2 நாட்களுக்கு மேலாக தற்காலிகமாக தடுப்பூசி போடுவது நிறுத்திவைக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று மாலை 5.20 மணியளவில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 570 கோவிஷீல்டு தடுப்பூசி குப்பிகள் சென்னை விமான நிலையம் வர இருப்பதாக சுகாதாரத்துறையானது தகவல் தெரிவித்துள்ளது. 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தக்கூடிய வகையில் 4,20,570 கோவிஷீல்டு குப்பிகள் சென்னை விமான நிலையத்திற்கு வர இருப்பதாக சுகாதாரத்துறையானது தகவல் தெரிவித்துள்ளது.
முக்கியமாக தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதால் பல இடங்களில் தடுப்பூசி போடக்கூடிய பணிகளானது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு தொகுப்பில் இருந்து வழங்கப்பட்டு வந்த கடந்த 29ஆம் தேதி வரை 58,410 கோவாக்சின் தடுப்பூசி தமிழகத்திற்கு கடைசியாக வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் இதுவரை 96 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் வரை 89,32,000 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. தற்போது வரை உள்ள கையிருப்பில் 4,93,000 தடுப்பூசிகள் இருந்தது. ஆனால் இதற்கு மேலாக தடுப்பூசி போடுவதில் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சூழல் ஏற்பட்டதால் தான் மத்திய அரசு தடுப்பூசி வழங்கும் வரை தடுப்பூசி செலுத்துவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையில் இன்று 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டுக்கு செலுத்துவதற்காக 4,20,570 குப்பிகள் இன்று சென்னை விமான நிலையத்திற்கு வர இருப்பதாக சுகாதாரத்துறையானது அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளது….
The post 4.20 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் இன்று மாலை சென்னை வருகின்றன: சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.