×

ஆசிரியர் பயிற்சித் தேர்வு விடைத்தாள் நகல்கள் இன்று வெளியீடு


சென்னை: ஆசிரியர் பயிற்சி தேர்வு எழுதிய மாணவர்களுக்கான விடைத்தாள் நகல்கள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் தொடக்க கல்வி பட்டயப் படிப்புகளை படித்து வரும் மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடந்தது. இந்த தேர்வில் பங்கேற்ற மாணவர்களில் விடைத்தாள் நகல்கள் கேட்டு விண்ணப்பித்திருந்த மாணவ மாணவியருக்கான விடைத்தாள் நகல்கள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளமான www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் இன்று (நவ. 6) பிற்பகல் வெளியிடப்படுகிறது. விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள் மேற்கண்ட இணைய தளத்தில் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்த பிறகு, மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் மேற்கண்ட இணைய தளத்தில் இருந்து அதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதை பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிட்டுள்ள கட்டணத் தொகையை 7 மற்றும் 8ம் தேதிகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாக செலுத்த வேண்டும்.விடைத்தாள் மறுகூட்டல்-2க்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஒரு பாடத்துக்கு ரூ205ம், விடைத்தாள் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஒரு பாடத்துக்கு ரூ505ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.

The post ஆசிரியர் பயிற்சித் தேர்வு விடைத்தாள் நகல்கள் இன்று வெளியீடு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Directorate of Government Examinations ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய தேர்வு...