23 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் எச்சம் ஜிம்பாப்வேயில் கண்டுபிடிப்பு

ஹராரே: பூமியில் சுமார் 230 மில்லியன் (23 கோடி) ஆண்டுகளுக்கு முன்பு சுற்றித் திரிந்த ஆப்பிரிக்காவின் பழமையான டைனோசரின் எச்சங்களை ஜிம்பாப்வே விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தற்போது கண்டறியப்பட்ட புதிய வகை டைனோசர், ஒரு மீட்டர் (3.2 அடி) உயரம், நீண்ட வால் மற்றும் 30 கிலோ வரை உடல் எடையுள்ளதாக இருந்தது என்று சர்வதேச பழங்கால ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஜிம்பாப்வேயில் முதல் எலும்பைக் கண்டுபிடித்த விஞ்ஞானி கிறிஸ்டோபர் கிரிஃபின் கூறுகையில், ‘தாவரங்கள், சிறிய விலங்குகள்,பூச்சிகளை உண்ணும் பலசாலி விலங்கினமான டைனோசர், சவுரோபோடோமார்ப் இனத்தைச் சேர்ந்தது. ராட்சத கழுத்து டைனோசர்கள் பரிணாம வளர்ச்சியில் வந்தன. ஜிம்பாப்வே, ஜாம்பியா, அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2017 முதல் 2019ம் ஆண்டு வரை இரண்டு டைனோசர் எலும்புக்கூடுகளை கண்டுபிடித்துள்ளனர்’ என்றார்….

The post 23 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் எச்சம் ஜிம்பாப்வேயில் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: