முக்கிய செய்தி சென்னை மதுரவாயல் அம்மா உணவகத்தில் தாக்குதல்: இருவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் May 04, 2021 மதுராவல் கி.மு. கே. ஸ்டாலின் சென்னை: சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் தாக்குதல் நடத்திய திமுகவினர் இருவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்த பெயர் பலகைகளை திமுகவை சேர்ந்த இருவர் சேதப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது. இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் இவ்விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்தநிலையில், மதுரவாயல் பகுதியில் அம்மா உணவகத்தின் பெயர் பலகையை நீக்கிய திமுகவை சேர்ந்த 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்து திமுக தலைவர் உத்தரவிட்டார். உணவகத்தின் பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் பொருத்தவும், 2 பேர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் இரவர் மீது போலீவார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
ஒவ்வொரு இவிஎம்-ல் பதிவான வாக்குகள் எண்ணி முடித்த பிறகு அனைத்து முகவர்களும் சரிபார்த்த பிறகே அடுத்த இயந்திரத்தை எண்ண வேண்டும் : தேர்தல் ஆணையம்
வாக்குப்பதிவில் வரலாறு படைத்த இந்தியா.. எந்த நாட்டிலும் இல்லாத வகையில் 64 கோடி மக்கள் வாக்களித்து உலக சாதனை : தேர்தல் ஆணையம் பெருமிதம்!!
நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை கலைஞரை தவிர்த்து விட்டு எழுத முடியாது :இண்டியா கூட்டணி தலைவர்கள் புகழாரம்
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முடிந்த நிலையில் அமுல் பாலின் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாக அறிவிப்பு
கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
தலைவரே பாதை அமைத்தீர்கள், பயணத்தை தொடர்கிறோம்: கலைஞரின் நூற்றாண்டு நிறைவை ஒட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
ஆட்டத்திறன் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தால் எதுவும் எளிதே: இந்தியா – பாகிஸ்தான் போட்டி குறித்து பேசிய பாபர் அசாம்
புகழால் அல்ல, செயலால் மறக்க முடியாத தலைவர் கலைஞர்: கலைஞர் நூற்றாண்டு நிறைவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஒட்டி, சென்னை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கு தலா 2 பொதுப் பார்வையாளர்களை நியமனம்