சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் 100 மாணவர்களுக்கு பட்டம், பதங்கக்கங்களை வழங்கினார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

சென்னை: டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மைசூரு வரும் குடியரசுத் தலைவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்றார்.அங்கு “தி எலிபன்ட் விஸ்பரஸ்” ஆவணப்படத்தில் இடம்பெற்ற பொம்மன், பெள்ளி குடியிருக்கும் பகுதிக்கு செல்வதோடு யானைகள் முகாமையும் பார்வையிட்டார் . மீண்டும் மைசூரு விமான நிலையம் சென்று குடியரசுத் தலைவர், மாலை 6.30 மணி அளவில் சென்னை வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை ஆளுநர் ஆர்.என் ரவியுடன் இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். இரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கும் திரௌபதி முர்மு, இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவிலும் முதலமைச்சர் பங்கேற்று உள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு முப்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. ஆளுநர் மாளிகையில் உள்ள மைதானத்தில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் 100 மாணவர்களுக்கு பட்டம், பதங்கக்கங்களை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்குகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை பல்கலை. 165-வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. சென்னை பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் 1,04,416 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

The post சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் 100 மாணவர்களுக்கு பட்டம், பதங்கக்கங்களை வழங்கினார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு appeared first on Dinakaran.

Related Stories: