×

12 மணி நேர வேலை மசோதா குறித்து தலைமைச் செயலகத்தில் தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர்கள் ஆலோசனை..!!

சென்னை: தொழிற்சாலைகள் சட்டமுன்வடிவு தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் 70க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 12 மணி நேர வேலை மசோதா குறித்து தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர்கள் வேலு, அன்பரசன், சி.வி.கணேசன், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மசோதாவுக்கு திமுக கூட்டணி கட்சிகள், தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

The post 12 மணி நேர வேலை மசோதா குறித்து தலைமைச் செயலகத்தில் தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர்கள் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Union Union ,Chennai ,Union ,Dinakaran ,
× RELATED இந்திய அளவில் மின்வெட்டு குறைவான...