×

ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி

டெல்லி: ரேபரேலி தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி 3,50,030 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். மக்களவைத் தேர்தலில் ரேபரேலி மற்றும் வயநாடு என இரு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுலகாந்தி மிகப்பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தல் வாக்கு என்ணிக்கை இன்று காலை மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி 3 லட்சத்து 24 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். அவர் 5 லட்சத்து 85 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ள நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் ஏஜி ராஜா 2 லட்சத்து 61 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் கே சுரேந்திரன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

2019 ஆம் ஆண்டில், கேரளாவின் வடகிழக்கில் அமைந்துள்ள வயநாடு பிபி சுனீரை ராகுல் காந்தி தோற்கடித்தார். 2019 பொதுத் தேர்தலில் ராகுல் காந்தி 706,367 வாக்குகள் பெற்றார். இரண்டாவது இடத்தில், CPI(M) இன் PP சுனிர் 274,597 வாக்குகள் பெற்றார். 2014ல் காங்கிரஸ் சார்பில் எம்.ஐ.ஷானவாஸ் வெற்றி பெற்றார். காங்கிரஸின் கோட்டையான வயநாடு தொகுதி, வயநாடு தொகுதியில் 2009 முதல் காங்கிரஸ் வெற்றி பெற்று வருகிறது.

எனினும் பாஜக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் இடையே குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவின் இருப்பதால் ஆட்சியைக் கைப்பற்ற போவது யார் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்த நிலையில் கேரளாவின் வயநாட்டில் மற்றும் உத்தப்பிரநோத்தின் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், கேரளாவின் வயநாட்டில் 3,50,030 வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலையில் உள்ளார். ஏறக்குறைய ராகுல்காந்தியின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர். கட்சியினரிடையே மகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Rebarelli ,Wayanadu ,Delhi ,Raybareli ,Rahulakanti ,Repareli ,Lok Sabha ,Rekareli ,Dinakaran ,
× RELATED அனைத்து முடிவுகளையும் அதானிக்கும்...