×

வாரணாசி தொகுதியில் சுமார் 1.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி வெற்றி : தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

லக்னோ : உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றுள்ளார். 80 மக்களவைத் தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேசத்தில் இண்டியா கூட்டணி 45 இடங்களிலும் பாஜக 34 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு முறை வாரணாசி தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி, 2024 மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார். அவர் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அதர் ஜமால் லாரி ஆகியோரை எதிர்த்துப் போட்டியிட்டார்.

மாலை 4 மணி நிலவரப்படி, பிரதமர் மோடி 6,12,970 வாக்குகளையும், காங்கிரஸின் அஜய் ராய் 4,60,457 வாக்குகளையும் பெற்றுள்ளார். 1.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் உள்ளார். ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார். இதனிடையே அயோத்தி ராமர் கோயிலை உள்ளடக்கிய ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் தோல்வி அடைந்தார். சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் வெற்றி பெற்றுள்ளார். மேலும் உத்திரப் பிரதேசத்தில் தனித்துப் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி 80 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்துள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் சமாஜ்வாதியுடன் கூட்டணி சேர்ந்து 10 இடங்களை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post வாரணாசி தொகுதியில் சுமார் 1.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி வெற்றி : தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Varanasi ,Election Commission ,Lucknow ,Narendra Modi ,Varanasi Lok Sabha ,Uttar Pradesh ,India Alliance ,BJP ,Dinakaran ,
× RELATED கங்கை மாதா என்னை மடியில் ஏந்திக் கொண்டார் : பிரதமர் மோடி