×

வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிப்பதை தேர்தல் ஆணையம் தாமதிப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லி: வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிப்பதை தேர்தல் ஆணையம் தாமதிப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியான முடிவுகளின்படி பாஜக கூட்டணி 294 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக மட்டும் 235 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா கூட்டணி 230 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் காங்கிரஸ் மட்டும் 99 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிப்பதை தேர்தல் ஆணையம் தாமதிப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ்; வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிப்பதை தேர்தல் ஆணையம் தாமதிக்கிறது. தேர்தல் ஆணைய இணையதளத்தில் கடந்த 2 மணி நேரமாக மந்த கதியில் தகவல் பதிவேற்றபடுகிறது. முடிவுகளை தாமதிக்கும்படி உத்தரவு எங்கிருந்து வந்தது என ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

The post வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிப்பதை தேர்தல் ஆணையம் தாமதிப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Congress ,Electoral Commission ,Delhi ,Election Commission ,Indian People's Election ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் மின்னணு வாக்கு...