சட்ட சபையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் உள்ள நகரங்களின் சுற்றுச்சூழல் செயல்திறனை மதிப்பிடுவதற்கும், இந்நகரங்களுக்குள் நேர்மறையான போட்டியை ஊக்குவிக்கவும் அந்நகரங்களின் பசுமை குறியீட்டின் அடிப்படையிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட தர அளவீடுகளின் அடிப்படையிலும் இந்த நகரங்கள் தர வரிசைப்படுத்தப்படும். இத்திட்டம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இந்த தரவரிசைப்படுத்தலில் உயர் குறியீடு பெறும் நகரம் அங்கீகரிக்கப்பட்டு அந்த ஆண்டுக்கான காலநிலை தூதராக அறிவிக்கப்படும். ஸ்ரீகாலநிலை மாற்றத்தை எதிர் கொள்வதற்கான திட்டங்கள் மற்றும் தீர்வுகளுக்கு ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஒரு பசுமை நிதி உருவாக்கப்படும். 38 மாவட்டங்களில் நீர்நிலைகளை சிறப்பாக பாதுகாக்கின்ற மற்றும் மேம்படுத்துகின்ற 100 பேருக்கு முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்கப்படும். அதன்படி நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வீதம் ரூ.1 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
The post நீர்நிலைகளை சிறப்பாக பாதுகாக்கின்ற, மேம்படுத்துகின்ற 100 பேருக்கு முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருது: அமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.