இதுவரைக்கும் செல்போன், பணம், நகையை பறிச்சாங்க... இப்போலாம் திருடர்கள் வேற லெவல்... சட்டையை கூட விடமாட்றாங்கய்யா...

சென்னை: இட்லி மாவு கடை ஊழியரை மடக்கி செல்போன் மற்றும் அவர் அணிந்திருந்த புதிய சட்டையை கழற்றி வாங்கிக்கொண்டு தப்பிய 2  பேரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அபிராமபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (18). இவர், அருகில் உள்ள இட்லி மாவு விற்பனை கடையில் வேலை ெசய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையின் உரிமையாளருக்கு ஓட்டலில் டிபன் வாங்க ஆர்.ஏ.புரம் நோக்கி ெசன்று கொண்டிருந்தார். அப்போது, வழிமறித்த இரண்டு பேர் முகவரி கேட்பது போல் நடித்து கார்த்திக்கை மிரட்டி செல்போன், 300 பணத்தை பறித்தனர். உடனே, கார்த்திக் அணிந்து இருந்த புதிய சட்டையை பார்த்த கொள்ளையர்களில் ஒருவன், மிரட்டி சட்டையை கழற்றி வாங்கிக்கொண்டு இருவரும் மாயமாகிவிட்டனர்.

இதனால் பயந்து போன கார்த்திக், விட்டால் போதும் என்று ஓடிச்சென்று தனது கடையின் உரிமையாளரிடம் சம்பவம் குறித்து தெரிவித்தார். பின்னர் சம்பவம் குறித்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு ெசய்து தப்பி ஓடிய 2 கொள்ளையர்களையும் தேடி வருகின்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இவ்வளவு நாட்கள் நகை, பணம், செல்போன் ஆகியவற்றை பைக்கில் வரும் ஆசாமிகள் மற்றும் கொள்ளையர்கள் வழிமறித்து பறித்து சென்றனர். தற்போது, கொள்ளையர்கள் வேற லெவலில் திருட ஆரம்பித்துள்ளனர். சாலையில் தனியாக நடந்து செல்பவர்களை மடக்கி பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துவிட்டு அவர்கள் போட்டிருக்கும் உடைகளையும் கழட்டி பிடுங்கி செல்கின்றனர். இதனால், நடுரோட்டில் உடம்பில் துணியில்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் அவமானப்படுகின்றனர்.

Related Stories: