வீட்டின் சுற்றுப்புறத்தில் கழிவு தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் டெங்கு ஆய்வில் கலெக்டர் வேண்டுகோள்

மதுரை, நவ.12:  வீட்டின் சுற்றுப்புறத்தில் கழிவுநீர் தேங்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் நடராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  மதுரை மாநகராட்சி வார்டு 83க்குட்பட்ட பகுதிகளான வடக்கு பெருமாள் மேஸ்திரி வீதி, நாடார் சந்து, வடக்குமாசி வீதி, மேலமாசி வீதி மற்றும் வார்டு 84க்குட்பட்ட பகுதிகளான இராமாயண சாவடித்தெரு, வடக்கு ஆவணி மூலவீதி, சப்பாணி கோவில் தெரு, ஆதிமூலம் பிள்ளை சந்து, ஆவின் பார்க், கீழசித்திரை வீதி உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் நடராஜன் டெங்கு தடுப்பு நடவடிக்கை ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது:  வீட்டின் உரிமையாளர்கள் வீட்டின் உள்ளே மற்றும் வெளியே உள்ள பகுதிகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.  வீட்டின் சுற்றுப்புறத்தில் கழிவுநீர் ஏதும் தேங்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். தண்ணீர் சேமித்து வைத்துள்ள குடம் மற்றும் பானைகளை மூடி வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: