பட்டாசு குடோன் விபத்து சேலம் கோர்ட்டில் உரிமையாளர் சரண்

கெங்கவல்லி,செப்.11: கெங்கவல்லி தாலுகா நடுவலூர் எல்லைக்குட்பட்ட மொட்டைபாலம் பகுதியில் பட்டாசு கடை நடத்தி வருபவர் ரசீத். இவர், அருகில் உள்ள தனியார் விவசாய தோட்டத்தில் அனுமதி யின்றி பட்டாசுகளை தயாரித்து வந்துள்ளார். இந்நிலையில், தோட்டத்தில் கம்பிவேலி அமைக்க முடிவு செய்த உரிமையாளர்,  அதற்காக வெல்டிங் வைத்தபோது பட்டாசு குடோனில் தீப்பொறி விழுந்ததில் அங்கிருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில், அங்கு பணியாற்றி வந்த தெடாவூர் புதூரைச் சேர்ந்த பாலமுருகன் (28) என்ற பட்டதாரி உயிரிழந்தார். இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ரசீத்தை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், கெங்கவல்லி காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்த நிலையில் நேற்று சேலம் ஜேஎம் 6 நீதிமன்றத்தில் உரிமையாளர் ரசீத் சரணடைந்தார். அவரை கெங்கவல்லி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

Related Stories: