மாஸ்க் அணியாத 2,718 பேரிடம் ரூ.6.90 லட்சம் அபராதம் வசூல்: விதிமீறிய 158 வாகனங்கள் பறிமுதல்

சென்னை: முகக்கவசம் அணியாமல் சுற்றியதாக 2,718 பேரிடம் ரூ.6.90 லட்சம் அபராதமாக போலீசார் வசூலித்துள்ளனர். கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி போலீசார் ‘சிறப்பு முகக்கவசம் அமலாக்க குழு’ அமைத்து முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக 89 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றியதாக 2,718 பேர் மீது வழக்கு பதிவு செய்து அபராதமாக 6 லட்சத்து 90 ஆயிரத்து 900 ரூபாய் வசூலித்துள்ளனர். மேலும், சமூக இடைவெளி இன்றி சுற்றியதாக 60 வழக்குகள் பதிவு செய்து அபராதமாக ரூ.30 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றியதாக 144 பைக்குகள், 8 ஆட்டோக்கள், 6 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 158 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கை தொடரும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: