முக்கிய செய்தி சென்னை மாமல்லபுரம் அருகே கார் விபத்து : நடிகை யாஷிகா ஆனந்த் மீது போலீசார் 3 பரிவுகளில் வழக்குப்பதிவு Jul 25, 2021 Mamallapura யஷிகா ஆனந்த் சென்னை: மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்து தொடர்பாக நடிகை யாஷிகா ஆனந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு தொடர்ந்துள்ளனர். அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 279 337 304 A ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நடிகை யாஷிகாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகை யாஷிகா ஆனந்த், தனது நண்பர்களுடன் நேற்று நள்ளிரவில் காரில் பயணம் செய்திருக்கிறார். அப்போது மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் சென்றபோது அவர் சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நடிகை யாஷிகா அதிவேகமாக கார் ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை யாஷிகா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். அதன் பின்னர், இருட்டு அறையில் முரட்டு குத்து, ராஜ பீமா, இவன் தான், நோட்டா, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் மேலும் கடமை செய் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
மீண்டும் வாக்குச் சீட்டு முறை கிடையாது எல்லா ஒப்புகை சீட்டுகளையும் எண்ண முடியாது: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்ற தமிழ்நாடு வீராங்கனை நேத்ரா குமணனுக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து!
விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம்: தமிழ்நாடு அரசு!
நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!
பிரிஜ் பூஷணுக்கு எதிரான பாலியல் வழக்கு: மே 7ம் தேதி குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் ஆணை!!
பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் மேடையில் கண்ணீர் விட்டு அழுவதை பார்க்கலாம்: ராகுல் காந்தி விமர்சனம்
வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தருக: தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை!!
இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் தேர்தலுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பதா?..சமூகநீதி குளவிக்கூட்டில் கை வைக்க வேண்டாம்: கி.வீரமணி சாடல்
தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெறவுள்ளதால் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்
கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் தர முயன்ற பாஜக வேட்பாளரிடம் இருந்து ரூ.4.8 கோடி பறிமுதல்; போலீஸ் விசாரணை..!!
வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு