மத்திய குழு இன்று தமிழகம் வருகை

சென்னை: நிவர் புயல் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை பார்வையிட மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது.

இன்று மாலை 3.30 மணிக்கு தலைமை செயலகம் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். இதையடுத்து, மத்திய குழுவினர் இரண்டு பிரிவாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளனர். ஒரு  குழுவினர் வேளாண்மை துறை செயலாளர் ககன்சிங் சிங் பேடி மேற்பார்வையில் நாளை (6ம் தேதி) காலை 9 மணிக்கு வடசென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்கிறது. 2வது குழுவினர் மணிவாசன்  ஐஏஎஸ் மேற்வையில் நாளை (6ம் தேதி) காலை 9 மணிக்கு வடசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும், 7ம் தேதி வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களிலும் நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு  செய்வார்கள். 3 நாள் ஆய்வு பணிகளை முடித்துவிட்டு, 8ம் தேதி மாலை 5.30 மணிக்கு டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: