கதர் தொழிலுக்கு கைகொடுப்போம்: முதல்வர் வேண்டுகோள்

சென்னை: நெசாவளர்களின் வாழ்வில் ஏற்றம்பெற கதர் தொழிலுக்கு கைகொடுப்போம் என முதல்வர் கூறியுள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை: கதர் பயன்படுத்துவதினால் மட்டுமே லட்சக்கணக்கான ஏழை மக்கள் அவர்தம் இல்லத்திலேயே வேலை செய்து வாழ வழி வகுக்கிறது என்ற அண்ணல் காந்தியடிகளின் வரிகளை மனதில் நிறுத்தி, அன்னாரின் பிறந்தநாளான இந்நன்னாளில், மக்கள் அதிக அளவில் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்தி, அதனை நெசவு செய்யும் ஏழை, எளிய நெசவாளர்களின் வாழ்வு ஏற்றம் பெற துணைபுரிய வேண்டும். கிராமங்களில் வாழும் கைவினைஞர்கள் மூலம் புதிய யுத்திகளுடன் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்கள் தமிழ்நாட்டில் உள்ள 51 கதரங்காடிகளின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கதர் ஆடைகளின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அனைத்து கதர் ரகங்களுக்கும் ஆண்டு முழுவதும் 30 சதவிகிதம் தள்ளுபடி வழங்கி வருகிறது.  கதர், எளிமை மற்றும் தேசப்பற்றினை வெளிப்படுத்துவதுடன், இந்திய கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கிறது. அத்தகைய சிறப்புமிக்க கதர் ஆடைகளை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் வாங்கிப் பயன்படுத்தி, ஏழை எளிய கதர் நூற்போர் மற்றும் நெசவாளர்களின் வாழ்வு சிறக்க உதவிட வேண்டும்.

Related Stories: