கொரோனா 2வது அலை வந்தால் சந்திக்க தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: கொரோனா 2வது அலை வந்தால் அதை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னை ஓமந்தூரார் கொரோனா மருத்துவமனையில் ரூ.2 கோடி செலவில் 16 சிடி ஸ்கேன் கருவிகளுடன் கூடிய கொரோனாவிற்கு பிந்தைய தொடர் கண்காணிப்பு மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கொரோனா சிகிச்சையில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

ஓமந்தூரார் மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள தொடர் கண்காணிப்பு மையத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் வர வேண்டும். முப்பரிமாண முறையில் கொரோனாவுக்கு சிகிச்சை வழங்கப்படுவதால் 90 சதவிகிதம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனா 2ம் அலை வந்தால் அதை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. பெருந்தொற்று காலத்திலும் களத்துக்கு சென்று அரசு பணியாற்றி வருகிறது. தமிழ்நாடு அரசு முன்கூட்டியே எடுத்த நடவடிக்கையால்கொரோனா, டெங்கு உள்ளிட்ட நோய்ப்பரவல் கட்டுக்குள் உள்ளது. பொதுமக்கள் முகக்கவசத்தை முறையாக அணிந்து ஒத்துழைத்தால் எந்த அலையையும் தடுக்க முடியும்.

Related Stories: