எழும்பூர் ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் ஒழிப்பு, ரயில் நிலையங்களில் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று எழும்பூர் ரயில் நிலையத்திலும்  பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ரயில்வே இயக்குநர் ஜெயவெங்கடேசன் தலைமையில் நடத்தப்பட்டது. இதில் ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர்  அனைவரும் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள குப்பையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மாணவிகளின் செல்போன் திருட்டு: தூய்மை இந்தியா திட்ட பணியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவிகளிடம்  ஒரு பெண் வந்து நைசாக பேசி அவர்களின் செல்போனை பத்திரமாக வைக்குமாறு ஒரு இடத்தை காட்டியுள்ளார். இதை நம்பி 4  மாணவிகள் செல்போன்களை ஒரு பையில் போட்டு அந்த இடத்தில் வைத்துள்ளனர். சிறிது நேரம் கழித்து செல்போனை எடுக்க மாணவிகள் வந்தபோது அவர்கள் வைத்த இடத்தில் செல்போன் காணாமல் போயிருப்பதை கண்டு  அதிர்ச்சியடைந்தனர். 

Related Stories: