தேர்தல் ஆலோசனை

தாம்பரம்: ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி செலவின பார்வையாளர் அமீஷ் அகர்வால் தலைமையில், தேர்தல் ஆலோசனை கூட்டம், தாம்பரத்தில் நேற்று மாலை  நடைபெற்றது.பல்லாவரம், தாம்பரம் மற்றும் பெரும்புதூர் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், வேட்பாளர் தாக்கல் செய்யும் கணக்கு விபரங்களை சரியாக தணிக்கை செய்ய வேண்டும். தேர்தல் கமிஷன் விதிப்படி  நிர்ணயிக்கப்பட்டுள்ள 70 லட்சம் ரூபாய் மதிப்பைவிட வேட்பாளர் அதிகம் செலவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: