பெரம்பூர் தொகுதியில் அதிமுகவினர் பணம் பட்டுவாடா?

* தடுத்த திமுகவினர் மீது தாக்குதல் * தேர்தல் அதிகாரியிடம் புகார்

பெரம்பூர்: பெரம்பூரில் வாக்காளர்களின் அடையாள அட்டை மற்றும் செல்போன் எண்களை பெற்று, பணம் பட்டுவாடா செய்ய முயன்ற அதிமுகவினரை திமுகவினர் தட்டிக் கேட்டனர். இதனால், ஆத்திரமடைந்த  அதிமுகவினர் ஒன்றாக திரண்டு திமுகவினரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வடசென்னை நாடாளுமன்ற தேர்தலுடன், பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் திமுக, அதிமுக, அமமுக ஆகிய கட்சிகள் போட்டியிடும் ேவட்பாளர்களை  அறிவித்து வேட்பு மனுதாக்கல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்தமுறை ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடும் போது வாக்காளர்களுடைய அடையாள அட்டை நகல் மற்றும் தொலைேபசி எண் உள்ளிட்டவற்றை வாங்கிக்கொண்டு வீடு வீடாக சென்று பணம் வழங்கினர்.  அதேபோல் தற்போது பெரம்பூர் சட்டமன்ற இடைத் தேர்தலுக்காக அதிமுகவினர் கடந்த ஒரு வார காலமாக கொடுங்கையூர் 35 மற்றும் 37 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளான திருவள்ளுவர் சாலை, விேவகானந்தர் நகர்,  கிருஷ்ணமூர்த்தி நகர், கண்ணதாசன் நகர், முத்தமிழ் நகர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்காளர்களிடம் ஆதார் அட்டை நகல் மற்றும் செல்போன் எண்ணையும் வாங்கி வருகின்றனர்.

இதுபற்றி அறிந்த திமுக சிறுபான்மை அணி அமைப்பாளர் சல்மான் மற்றும் திமுகவினர் கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியில் நேற்று காலை சென்று, அதிமுகவினரை தடுத்து நிறுத்தி, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் டேவிட் ஞானசேகரன் தடுத்து நிறுத்திய சல்மான் மற்றும் அவருடன் வந்தவர்களை சரமாரியாக தாக்கினார். சல்மான் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த திமுகவினர் அங்கு திரண்டதால், அதிமுகவினர் அங்கிருந்து வேகமாக கலைந்து சென்றனர். இதுகுறித்து சல்மான், திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர், வடசென்னை மாவட்ட  வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மருதுகணேஷ் ஆகியோர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் தேேவந்திரன் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பினார். இதையடுத்து, திமுகவினர் கலைந்து சென்றனர். மேலும் திமுகவினர் பெரம்பூர் சட்டமன்ற  தேர்தல் நடத்தும் அலுவலர் கருணாகரனிடம் அதிமுகவினரின் முறைேகடுகள் குறித்து புகார் அளித்தனர். பறக்கும் படையினருக்கு தகவல் கொடுத்தால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், மீண்டும் ஒரு ஆர்.கே.நகர் ேபால் பெரம்பூர் ஆகிவிடுமோ என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும் இதுகுறித்து தேர்தல்  ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: