ஈரான் கச்சா எண்ணெய் இறக்குமதி 12% குறையும்

புதுடெல்லி: ஈரானில் இருந்து அடுத்த மாதம் 8 மில்லியன் பேரல்களை மட்டுமே இந்தியா இறக்குமதி செய்ய உள்ளது. இது நடப்பு மாதத்தை விட 12 சதவீதம் குறைவு.  ஈரான் மீது தடை விதித்துள்ள அமெரிக்கா, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மட்டும் கடந்த நவம்பர் மாதம் அனுமதி அளித்தது. 6 மாதங்களுக்கு இந்த சலுகை அமலில் இருக்கும். ஆனால் இதற்கு சில நிபந்தனைகளை அமெரிக்கா விதித்துள்ளது.   இதன்படி நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பேரல் அல்லது மே மாதம் வரை மாதம் ஒன்றுக்கு 9 மில்லியன் பேரல்களை இந்தியா இறக்குமதி செய்யலாம். வரும் ஏப்ரல் மாதத்தில் ஈரானில் இருந்து இந்தியா 8 மில்லியன் பேரல்கள் இறக்குமதி செய்ய உள்ளது. இது இந்த மாதம் மேற்கொள்ளும் இறக்குமதியை விட 12 சதவீதம் குறைவாகும்.

 ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை 20 சதவீதம் குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதன்படி, இந்த சலுகையை நீட்டித்து நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் பேரல் மட்டும் இறக்குமதி செய்ய அனுமதிக்கலாம் என்று அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  ஈரான் கச்சா எண்ணெய்க்கான பணத்தை இந்தியா ரூபாயாகவே அளிக்கிறது. இதை ஈரான் இந்தியாவில் இருந்து மருந்துகள், சர்க்கரை வாங்க பயன்படுத்துகிறது. இதனால் டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் இறக்குமதி செலவையோ, பெட்ரோல், டீசல் விலையில் உயர்வையோ ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: