ஜிஎஸ்டி வரி குறைப்பு பலன் வாடிக்கையாளருக்கு வரவில்லை

புதுடெல்லி:   கடந்த மாதம் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கட்டுமானத்தில் உள்ள வீடுகளுக்கு ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. மலிவு விலை வீடுகளுக்கான ஜிஎஸ்டி 1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது கட்டுமானத்தில் மலிவு விலை பிரிவு வீடுகளுக்கு ஜிஎஸ்டி 12 சதவீதம் என உள்ளது. இதில் இன்புட் கிரெடிட் பெறலாம். ஜிஎஸ்டி குறைப்பால், ரூ.40 லட்சம் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு விலை சுமார் ரூ.38 லட்சமாக பில்டர்கள் குறைப்பார்கள் என்று அரசு கருதுகிறது.

12 சதவீத வரியாக இருந்தால் ரூ.42 லட்சம் மதிப்புள்ள வீட்டுக்கு வரி மட்டும் சுமார் ரூ.5 லட்சம் அதிகரித்து ரூ.47 லட்சமாக உயர்ந்து விடும். வரி குறைப்பின் மூலம், இன்புட் வரி கிரெடிட் இன்றி இந்த கட்டிடத்தின் விலை ரூ.44 லட்சமாகவும், 5 சதவீத வரி சேர்த்து ரூ.46.2 லட்சமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பில்டர்கள் பலர் வரி கிரெடிட் இருந்தும் அதன் பலனை வாங்குவோருக்கு அளிப்பதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: