போக்குவரத்துக்கழகத்தில் இதர பணி என்று வேலை எதுவும் பார்க்காமல் சம்பளம் வாங்குவோருக்கு எதிரான வழக்கு

மதுரை: போக்குவரத்து கழகத்தில் வேலை பார்க்காமல் சம்பளம் வாங்கும் ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினருக்கு பணி வழங்க கோரிய வழக்கில், கூடுதல் தலைமை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்க பொதுச்செயலர் கனகசுந்தர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் ெசய்த மனு: அரசு போக்குவரத்து கழகத்தின் மதுரை மண்டலத்தில் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 208 டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் இதர பணி என்ற பெயரில் எந்தப் பணியும் செய்யாமல் சம்பளம், சீருடை, சலவை படி பெற்று வருகின்றனர். இவர்களுக்காக மட்டும் மாதம் ரூ.60 லட்சம் சம்பளம் உள்ளிட்ட படிகள் வழங்கப்படுகிறது.

இதனால் போக்குவரத்து கழகத்திற்கு அதிகளவு நிதி இழப்பு ஏற்படுகிறது. எனவே, இதர பணி என்ற பெயரில் ஆளுங்கட்சியை சேர்ந்த டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பணி செய்யாமல் சம்பளம் பெறும் நடைமுறையை நிறுத்தவும்,  அவர்களுக்கும் பணி ஒதுக்கி பணியாற்றுமாறும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், மனு குறித்து போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலர், மதுரை கோட்ட மேலாண் இயக்குனர், மதுரை மண்டல பொது மேலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை பிப். 12க்கு தள்ளி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: