உணவு ஆர்டர், நிதிச்சேவை ஆப்ஸ் டவுன்லோடில் இந்தியாதான் டாப் : எல்லாவற்றுக்குமே ஸ்மார்ட் போன்தான்

புதுடெல்லி: உணவு ஆர்டர், நிதிச்சேவை ஆப்ஸ்கள் டவுன்லோடு செய்வதில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மொபைல் பேசுவதற்கு மட்டும் என்ற நிலை மாறி, மொபைலில்தான் எல்லாமே என்ற சூழ்நிலை உருவாகி விட்டது. எல்ேலாரது அன்றாட வாழ்க்கையிலும் ஸ்மார்ட்போன்கள் ஆதிக்கம் மிக பிரதானமாக உள்ளது. தகவல் பரிமாற்றம், ஷாப்பிங், உணவு ஆர்டர், வங்கிச்சேவைகள் என எல்லாவற்றுக்குமே ஆப்ஸ்கள் வந்து விட்டன. இவற்றை இந்தியர்கள் மிக அதிக அளவில் பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்துள்ளனர் என்று சமீபத்திய புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது.

 இதுதொடர்பாக தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்ட புள்ளி விவரத்தில், 2016ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை உலக நாடுகளில் உணவு ஆர்டர் மற்றும் நிதிச்சேவை ஆப்ஸ்கள் டவுன்லோடு பற்றி தகவல்களை அளித்துள்ளது. இதில், இந்தியாவில் பொதுவாக ஆப்ஸ்கள் டவுன்லோடு  1.65 மடங்கு உயர்ந்துள்ளது. சீனாவில் 70 சதவீதம், இந்தோனேஷியாவில் 55 சதவீதம் அதிகரித்துள்ளது.

உணவு டெலிவரி ஆப்ஸ்களை பொறுத்தவரை இந்தியாவில் 9 மடங்கு அதிகரித்துள்ளது. உலக சராசரி 115 சதவீதம் மட்டுமே. அதைவிட இந்தியாவில் பல மடங்கு அதிகரித்துள்ளது. உபர் ஈட்ஸ், ஜொமெடோ ஆப்ஸ்கள் முதல் 2 இடங்களில் உள்ளன. உணவு மற்றும் பானங்கள் ஆர்டர் செய்வதற்கான ஆப்ஸ்கள் திறக்கப்பட்ட எண்ணிக்கையை பொறுத்தவரை 120 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் மற்ற நாடுகள் முன்னணியில் உள்ளன. ஆனால் ஒட்டு மொத்த அளவில் இந்தியா 2ம் இடத்திலும் அமெரிக்கா முதலிடத்திலும் உள்ளன.

 2016 மற்றும் 2018 ஆண்டுகளில் ஒப்பீடு செய்யும்போது நிதிச்சேவை ஆப்ஸ்களில் இந்தியா முதலிடத்திலும், பிரேசில், ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ், லண்டன், சீனா, கனடா, தென்கொரியா ஆகியவை முதல் 10 இடங்களில் இருக்கின்றன. முதல் 5 இடங்கிளல் உள்ள உணவு டெலிவரி ஆப்ஸ்களை பொறுத்தவரை இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரேசில், தென்கொரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி ஆகியவை முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.

உணவு டெலிவரிக்கு அடுத்து ஆன்லைன் ஷாப்பிக் ஆப்ஸ்கள் பயன்பாட்டிலும் இந்தியாவில் பயன்பாடு மிக அதிகம் உள்ளது. இது இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் அதிவேக வளர்ச்சி அடைந்துள்ளதை காட்டுகிறது. ஆன்லைன் ஷாப்பிங்கை பொறுத்தவரை, வரும் 2021ம் ஆண்டில் உலக அளவில் நடைபெறும் மொத்த ஆன்லைன் ஷாப்பிங்கில் 75 சதவீதம் மொபைல் மூலம் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: