நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் டிஸ்மிஸ்

சென்னை:  இலங்கை தமிழர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட்  பெற்று தந்தது தொடர்பாக கடந்த  ஆண்டு ஜூன் மாதம் திருவல்லிக்கேணியை சேர்ந்த ராமு(எ)ராமலிங்கம், இலங்கை தமிழர்களான போரூரை சேர்ந்த விமல்தாஸ், முகலிவாக்கத்தை சேர்ந்த குணா(எ)குணராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த மோசடிக்கு நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் முருகன்(46) உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். துறைரீதியாக சஸ்பெண்ட்டும் செய்யப்பட்டார். இந்நிலையில் போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் தலைமை காவலர் முருகனை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார். அதற்கான  உத்தரவை முருகனிடம் போலீசார் வழங்கினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: