ஜெ.வுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டதாக ராதாகிருஷ்ணன் வாக்குமூலம்: வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி

சென்னை : ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜர் ஆனார். விசாரணையில், ஜெயலலிதா சிகிச்சை பெறும்போது நேரில் பார்த்தது மற்றும் கண்ணாடி வழியாக பார்த்தது தொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பேட்டி அளித்துள்ளார். மேலும் ஆணையத்தின் நீதிபதி, ஏன் ஜெயலலிதாவை அழைத்துச் செல்லவில்லை என கேள்வி எழுப்பினார். அதற்கு ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கும் அவசியம் ஏற்படவில்லை என்றும், அப்பல்லோ மருத்துவமனையிலேயே சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளதாக தெரிவித்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சை குறித்த கேள்விகள் மிகுந்த வேதனை அளிப்பதாகவும் ராதாகிருஷ்ணன் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவிற்கு அளித்த சிகிச்சை குறித்து தினமும் அப்போலோ மருத்துவக் குழுவிடம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக ராதாகிருஷ்ணனிடம் ஆறுமுகசாமி ஆணையம் 4 மணி நேரம் விசாரணை நடத்தியது. மேலும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை வரும் செவ்வாயன்று (டிச.18ம் தேதி) மீண்டும் ஆஜராக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அதேபோல் போயஸ் கார்டனில் வேலை பார்த்த 3 பணிப்பெண்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணை முற்றிலுமாக நிறைவடைந்ததாக வழக்கறிஞர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: