கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பண்டிகை பொருட்களின் விற்பனை ஆரம்பம்

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அந்த பெருவிழாவில் இடம்பெறும் பொருட்கள் விற்பனைக்கு சென்னை பெருநகரம் தயாராகி வருகிறது. கருணையின் உருவாகவும் சேவையின் தந்தையாகவும் கிறிஸ்தவ மக்களால் பணிந்து தொழப்படும் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து கிறிஸ்தவர்கள் தங்கள் இல்லங்களில் மின் விளக்கொளியில் ஜொலிக்கும் நட்சத்திரங்களை கட்டியும் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைத்தும் மகிழ்வர்.

இந்த வகையில் சென்னையின் பல்வேறு இடங்களிலும் கிறிஸ்துமஸ் நட்சத்திரங்கள், குடில்கள், கிறிஸ்துமஸ் மரங்கள், கிறிஸ்துமஸ் குடில்களில் வைக்கப்படும் அருளாளர்களின் பொம்மைகள், கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பிகள், விற்பனைக்கு வந்திருக்கின்றன. சென்னை எழும்பூரில் உள்ள கடைகளில் தைவான், சீனா, போலந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து தருவிக்கப்பட்ட கிறிஸ்மஸ் பொருட்கள் விற்கப்படுகின்றன. இந்த ஆண்டு புதிய வடிவத்திலான பல வண்ண மயமான அலங்காரப் பொருட்களும், தோரணங்களும் சந்தைக்கு வந்திருப்பதாக சென்னை வியாபாரிகள் கூறியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: