5 மாநில தேர்தல் முடிவுகள் மாற்றத்தின் துவக்கம் : சரத்பவார் கருத்து

மும்பை: ராஜஸ்தான், மிசோரம் உள்ளிட்ட  5 மாநில தேர்தல் முடிவுகள் மாற்றத்தின் துவக்கம் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு எதிரான மோடி அரசின் கொள்கைகளை மக்கள் புறக்கணித்து உள்ளதாக கூறினார். 5 மாநில தேர்தல் முடிவுகளில் பா.ஜனதாவுக்கு படுதோல்வி கிடைத்து உள்ளது. ரிசர்வ் வங்கியை கலந்து ஆலோசிக்காமல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் எடுத்தார். ஆனால் அவரின் இந்த முடிவில் நன்மை ஏதும் விளையாததால் நாடு முழுவதும் மக்கள் கடும் அதிருப்தியில்

உள்ளனர். ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் வேலைவாய்ப்பின்மையால் மக்கள் அனுபவித்துவரும் நெருக்கடி தான் இப்படி ஓட்டுகளாக வெளிப்பட்டுள்ளது

காங்கிரஸ் சத்திஷ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்து உள்ளது. இந்த தேர்தல் மூலம் மோடி அரசின் அதிருப்பதியை வாக்காளர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலை எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு சந்திக்க வேண்டும். அந்த நோக்கத்தில் எங்களது கட்சி காங்கிரசுக்கு ஆதரவு தெரிவிக்கிறது. இதேபோல சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளும் எதிர்க்கட்சிகள் அணியில் சேர வேண்டும் என்றார்.5 மாநில தேர்தல் முடிவுகளால் பா.ஜ.க-வின் நீண்ட நாள் கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டு உள்ளது. ஆனாலும் எதிர்கால தேர்தல்களில் இவர்கள் இருவரும் கூட்டணி வைத்து தான் போட்டியிடுவார்கள் என கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: