திருத்துறைப்பூண்டியில் 32 குளங்களில் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி வழக்கு : கலெக்டருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை சேர்ந்த வக்கீல் ஆர்.கே.அய்யப்பன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது: திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 32 குளங்கள்  ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 5 குளங்களை தனியார் மருத்துவமனைகள் ஆக்கிரமித்துள்ளன.  இதுபோன்ற ஆக்கிரமிப்புகளால் சாதாரண மழை பெய்தால்  கூட குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. மேலும், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. நீராதாரம் குறைந்துவருகிறது.  எனவே, திருத்துறைப்பூண்டி நகராட்சியில் உள்ள 32 குளங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கோரி சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அனுப்பினோம்.

ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  எனவே,  இந்த 32 குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு திருவாரூர் கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர், திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.வேணுகோபால், ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு திருவாரூர் கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர்,  திருவாரூர் நகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: