கஜா புயல் இன்று தீவிரம் அடையும்: நாளை கரையை கடக்கும்

சென்னை: மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ‘கஜா’புயல் நாளை மாலை கரையைக் கடக்கும்.   கஜா புயல்  வலுப்பெற்று வட மேற்கு திசையில் நகர்ந்து  தமிழகத்தை நோக்கி வேகமாக நகர்ந்து புயலாக மாறியது. சென்னை அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், கடல் பகுதியில் எதிரெதிர் திசையில்  வீசிய காற்றின் போக்கால் புயலின் திசை மாறியது.அத்துடன் புயலின் நகரும் வேகமும் குறைந்து மணிக்கு 5 கிமீ வேகத்தில் நகரத் தொடங்கியுள்ளது.இதன் காரணமாக சென்னைக்கு 730 கிமீ தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு 800 கிமீ தொலைவிலும் கஜாபுயல் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் இன்று மேலும் தீவிரம் அடைந்து தீவிரப் புயலாக மாறும். அதன் காரணமாக கடலில் மணிக்கு 80 கிமீ முதல் 90கிமீ வேகத்தில் காற்று வீசும். இது படிப்படியாக அதிகரித்து 15ம் தேதி  தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா  கடலோரப் பகுதியில்  100 கிமீ வேகத்தில் காற்று வீசும். 15ம் தேதி மதியத்துக்கு மேல் அந்த புயல் நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும். அப்போது காற்றின் வேகம் குறைந்து காணப்படும்.

தரைப் பகுதிக்கு வரும் இந்த புயல், உள் தமிழகம் வழியாக கேரள பகுதிக்கு சென்று 17ம் தேதி  அரபிக் கடல் பகுதிக்குள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடந்து செல்லும் 3 நாட்களில் கடலூர்,  நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும்.  சில இடங்களில் மிக கனமழை பெய்யும். குறிப்பாக 20 செமீ முதல் 22 செமீ வரை மழை பெய்யும் என்று  எதிபார்க்கப்படுகிறது. சென்னை, தெற்கு ஆந்தரா பகுதியிலும் 15ம் தேதி மழை பெய்யும்.

கஜா புயல் கரையை நோக்கி நகர்ந்து வருவதால், 1ம் தேதி இரவு தொடங்கி 15ம் தேதி காலை  வரை கடல் பகுதியில் இருந்து பலத்த காற்று வீசும் என்பதால் கடலோர மாவட்டங்களில் உள்ள குடிசை வீடுகளின் கூறைகள்  காற்றில் அடித்துச் செல்லப்படலாம். மண் சுவரால் கட்டப் பட்ட வீடுகள் இடிந்து விழுவதற்கான வாய்ப்புள்ளது. 2 கூண்டு ஏற்றப்பட்டுள்ளன. கடலில் புயல் தீவிரம் அடைந்துள்ளதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல  வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். அறிவிக்கப்பட்டு வருகிறது.

அங்கே...இங்கே...கஜா எங்கே?

கஜா புயல், அங்கு... இங்கு... என போக்கு காட்டி வந்த நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர்கள் சிலரும் கஜா புயல் குறித்து  வேறு விதமாக கணித்துள்ளனர். இதன்படி, கஜா புயல் 15ம் தேதி பகலில் மெல்ல நகர்ந்து தரைப் பகுதிக்கு வரும். அன்று இரவு 10 மணிக்கு கரை கடக்கும். முன்னதாக  இரவு 9மணி அளவில், கா்ற்று முறிவு காரணமாக கஜா புயல் இரண்டாக பிரிந்து ஒரு பகுதி  காரைக்கால் மற்றும் திருமலைராயன் பட்டினம் பகுதியிலும், மற்றொரு பகுதி திருத்துறைப்பூண்டி பகுதிக்கும் செல்லும். அன்று இரவு மேற்கண்ட இரண்டு பகுதியிலும் கனமழை பெய்யும். 16ம் தேதி சேலம் மாவட்டத்துக்கு நகர்ந்து  செல்லும், அங்கும் கனமழை பெய்யும். 17ம் தேதி நீலகிரி மற்றும் கேரளா வழியாக அரபிக்கடலில் இறங்கும். 17ம் தேதியும் மழை பெய்யும்.  சென்ைனயை பொருத்தவரையில் 15ம் தேதி மழை பெய்யும். 16ம் தேதி லேசான  மழை பெய்யும். என்றும் கணித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: