சிவகாசியில் பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூட முடிவு : உற்பத்தியாளர்கள் சங்கம்

சிவகாசி: சிவகாசியில் பட்டாசு ஆலைகளை காலவரையின்றி மூட முடிவெடுத்துள்ளதாக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 2015-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் சரவெடிகள் தயாரிக்க கூடாது, பட்டாசு தயாரிக்க தேவையான முக்கிய மூலப்பொருளான பேரியம் ஹைட்ரைட் பயன்படுத்தக்கூடாது, தீபாவளி, புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் குறிப்பிட்ட நேரத்தில் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. இது பட்டாசு உற்பத்தியை மறைமுகமாக ஒளிக்கக்கூடிய செயல் என்று சிவாகாசியில் உள்ள பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.  

அதன் அடிப்படியில் இன்று சிவாகாசியில் உள்ள பட்டாசு உற்பத்தியாளர்கள் அனைவரும் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. அப்போது இந்திய கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையிலும், அடிப்படை புரிதலின்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக  பல்வேறு தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. பட்டாசு வெடிப்பு நேரம் குறைப்பு என்ற உச்சநீதிமன்ற உத்தரவால் இந்த வருடம் சுமார் 60% பட்டாசுகள் விற்காமல் தேங்கியுள்ளன இதனால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் சுற்றுசூழல் விதிகளில் பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 1070 பட்டாசு ஆலைகளை மூட உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: