ஓஎன்ஜிசி வசம் உள்ள 149 எண்ணெய் வயல்களை தனியாரிடம் விற்க முடிவு

புதுடெல்லி: ஓஎன்ஜிசியின் 149 எண்ணெய் வயல்களை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்திடம் (ஓஎன்ஜிசி) உள்ள பங்குகளை மத்திய அரசு ஏற்கெனவே விற்பனை செய்துள்ளது. தற்போது 2வது கட்டமாக சிறிய எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களை விற்க திட்டமிட்டுள்ளது. வெளிநாடுகளில் கச்சா எண்ணெய் இறக்குமதியை 2022ல் 10 சதவீதம் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆலோசிக்க கடந்த மாதம் 12ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் ஓஎன்ஜிசியின் மொத்த உற்பத்தியில் 95 சதவீதம் 60 பெரிய எண்ணெய், எரிவாயு வயல்கள் மூலம் எடுக்கப்பட்டுள்ளன. எனவே எஞ்சிய சிறிய 149 எண்ணெய், எரிவாயு வயல்களை விறக மத்திய அரசு முடிவு செய்துள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: