ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள்-பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சூடு: பயங்கரவாதி ஒருவர் பலி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் ஹண்ட்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்பு படையினர் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இந்நிலையில் சர்ஜிக்கல் தாக்குதலை திட்டமிட்டவர்களில் ஒருவரான லெப்டினன்ட் ஜெனரல் பரம்ஜித் சிங், கூறியதாவது: இந்தியாவிற்குள் ஊடுருவவதற்காக, எல்லையில் பல இடங்களில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் 140 முதல் 160 பேர் வரை காத்திருக்கின்றனர் என்றும் இவர்களை எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது என்று தெரிவித்தார். பாகிஸ்தானில் பயங்கரவாத உட்கட்டமைப்புகள் உயிர்ப்புடன் தான் உள்ளது என்றும் அந்நாட்டின் எண்ணம் இன்னும் மாறவில்லை என்றார்.

பயங்கரவாதிகள் ஊடுருவ செய்வது மற்றும் தாக்குதல் நடத்த வைப்பதை பாகிஸ்தான் ராணுவமும், உளவுத்துறையான ஐஎஸ்ஐயும் தொடர்ந்து செய்து வருகின்றனர் என்றார். பாகிஸ்தானின் கொள்கை மாறாதவரை, எல்லை தாண்டிய பயங்கரவாதமும் நிற்காது என்றும் தெரிவித்தார். அதிக பனி பொழியும் வழிகளில் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஊடுருவ வைக்கும். இவர்களை எதிர்கொள்ள திட்டம் தயாராக உள்ளது. அனைத்து பாதுகாப்பு அமைப்புகளுடனும் ஆலோசனை நடத்திய பின், இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: