சோமாலிய நாட்டின் தலைநகரில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆக உயர்வு

மொகாதிஷு: சோமாலியா நாட்டின் தலைநகர் மொகாதிஷுவில் நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் மொகாதிஷுவில் உள்ள பிரபல உணவகம் அருகே 3 கார்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்து சிதறியது. இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் என பல்வேறு தரப்பு மக்களும் உடல் சிதறி உயிரிழந்தனர்.

பயங்கரவாதிகளால் திட்டமிட்ட நிகழ்த்தப்பட்ட இந்த கொடூர குண்டுவெடிப்புத் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 53 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலினால் அரசு கட்டடங்கள், பள்ளிக்கூடம் மற்றும் அருகில் இருந்த மசூதி ஆகியவை சேதமடைந்துள்ளன. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு அல்- சாபப் (AL-Shabab) என்ற பயங்கரவாத இயக்கத்தினர் பொறுப்பேற்றுள்ளனர்.

மேலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது பயங்கரவாதிகளின் வாகனத்தை தடுக்கச் சென்ற 3 பாதுகாப்பு படை வீரர்களும் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சோமாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதால் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என்று போலீசார் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: