உள்ளாட்சி தேர்தல் நடத்த அக். 29ல் ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வரும், 29 ல் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. செயற்குழு உறுப்பினர் லாசர் தலைமை வகித்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ேடார் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அதிமுக அரசு வரி சீராய்வு என்ற பெயரில், மக்கள் மீது கடும் தாக்குதலை தொடுத்துள்ளது. தோல்வி பயம் காரணமாக, உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து தள்ளிவைத்து வருகிறது.

தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில், அதிகாரிகளின் ராஜ்யம் கொடி கட்டிப் பறக்கிறது. ஜி.எஸ்.டி வரி, பணமதிப்பு நீக்கம், பெட்ரோல் - டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு என கடும் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு இந்த வரி உயர்வு கடும் சிரமத்தை ஏற்படுத்தும். இதை கண்டித்து அக்டோபர் 29ல் தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: