‘நீர் பங்கீட்டை முடக்கும் சட்டம்’

சென்னை: மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனைகளை தீர்க்காமல் இருக்க புதிய சட்டத்தை கொண்டு வர முயற்சியா? என்று மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கு இடையில் உள்ள 13 நதிகளுக்கான நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஆணையங்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இதை முடக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வரும் புதிய சட்டம் அமைந்து விடும். நீர் பங்கீடு, நீர் சேமிப்பு, நீர் ஆதாரம் போன்றவற்றில் அரசியல் கண்ணோட்டத்துடனும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகளை தீர்க்காமல் இருக்கும் வகையிலும் புதிய சட்டத்தை கொண்டு வரும் முயற்சியை மத்திய பாஜ அரசு கைவிட வேண்டும்.

மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீட்டில் நியாயமாக, நீதியின்படி உரிய தண்ணீரை, உரிய காலத்தில் வழங்க காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றை செயல்படுத்தி வேளாண் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் முன்னேற்றத்திற்கும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: