அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் (95) வயது மூப்பின் காரணமாக சமீப காலமாக கட்சியின் முக்கிய கூட்டங்களை தவிர மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில், அவருக்கு நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த தகவல் அறிந்ததும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அன்று இரவே மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து அன்பழகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தேறி வருகிறது. இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதால் உடல் நலம் தேறி நலமுடன் இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டொரு நாட்களில் உடல் நலம் தேறி இல்லம் திரும்ப இருப்பதால் திமுக நிர்வாகிகள்-தோழர்கள் எவரும் நேரில் வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: