தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்வு சவரன் ரூ24,464 என்ற புதிய உச்சத்தை தொட்டது: ஒரே நாளில் ரூ264 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. சவரன் ரூ24,464 என்ற புதிய உச்சத்தை தொட்டது. இதனால் நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. மாத துவக்கத்தில் 5 நாளில் சவரன் ரூ744 அளவுக்கு உயர்ந்தது. அதன் பிறகு 8ம் தேதி தங்கம் ரூ23,848 ஆக குறைந்தது. 9ம் தேதி ரூ23,776, 10ம் தேதி ரூ23,744 என்றும் குறைந்தது. தொடர்ந்து 11ம் தேதி தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. அதாவது, சவரனுக்கு ரூ184 உயர்ந்து, ஒரு சவரன் ரூ23,928, 12ம் தேதி சவரனுக்கு ரூ280 அதிகரித்து ஒரு சவரன் ரூ24208க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 13ம் தேதி சவரனுக்கு ரூ8 குறைந்து ஒரு சவரன் ரூ24200 விற்கப்பட்டது. ஆனால் நேற்று அதிர்ச்சி அளிக்கும் விதமாக கிராமுக்கு ரூ33 அதிகரித்து ரூ3,058க்கும், சவரனுக்கு ரூ264 உயர்ந்து ஒரு சவரன் ரூ24,464க்கும் விற்கப்பட்டது.

தங்கம் விலை வரலாற்றிலேயே சவரன் ரூ24,464 அளவுக்கு விற்றதில்லை என்றும் கூறப்படுகிறது. இது குறித்து சென்னை, தங்கம் வைரம் வியாபாரிகள் சங்க பொது செயலாளர் சாந்தகுமார் கூறியதாவது: அமெரிக்காவில் உள்ள வங்கிகள் நல்ல லாபத்தை ஈட்டியுள்ளது. அது மட்டுமல்லாமல் அமெரிக்காவின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச மார்க்கெட்டில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலை இதற்கு முன்னர் இந்த அளவுக்கு உயர்ந்தது இல்லை. இதற்கு முன்பு கிராம் ரூ3,025 வரை தான், அதாவது, சவரன் ரூ24,200க்கு விற்பனையானது. இதுவே அதிகப்படியான விலை உயர்வாக இதுவரை இருந்து வந்தது. தற்போது சவரன்ரூ24,464 விற்கப்படுவது என்பது ஒரு வரலாற்றிலேயே இது தான் முதல் முறையாகும். தங்கம் விலை உயர்வால் நகை கடைகளில் தங்கம் விற்பனை மந்தமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: