இளமையை நிரூபிக்கும் மீரா ஜாஸ்மின்

சண்டக்கோழி நடிகையான மீரா ஜாஸ்மின் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்தி இருந்தார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் தற்போது மகள் என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் படத்திலும் வாய்ப்புகள் தேடி வருகிறார். திருமணத்திற்கு பிறகு உடல் குண்டாகிவிட்ட மீரா ஜாஸ்மின் வெளியில் வராமல் இருந்தால் இப்போது உடல் எடையை குறைத்து பிட்டாகி இருக்கிறார். அந்த படங்களை தமிழ் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு தனது மேலாளர் மூலம் அனுப்பி வருகிறார்.

தற்போது சமூக வலைத்தளத்திலும் நுழைந்திருக்கும் மீரா ஜாஸ்தான் தான் இன்னும் இளமையாக இருப்பதை காட்டிக் கொள்ளும் விதமாக இந்தி பாடல் ஒன்றுக்கு நடனமாடி அந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அத்துடன் நீங்கள் எனக்காக உங்கள் நேரத்தை ஒதுக்குகிறீர்கள், உங்கள் அன்புக்கு நன்றி. இந்த அழகான பயணம் உங்களால் ஆனது. என்று தெரிவித்திருக்கிறார்.

Related Stories: