ராமர் பெயர் சர்ச்சையில் தமிழ் நடிகை : கவர்ச்சி உடையில் அச்சிடுவதா என கண்டனம்

நானி நடித்த தமிழ் படம் ஆஹா கல்யாணம். இதில் கதாநாயகியாக வாணி கபூர் நடித்திருந்தார். தற்போது இந்தியில் வார், ஷாம்ஷிரா படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டா மற்றும் ஃபேஸ்புக் பகுதியில் கவர்ச்சி படம் ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் அணிந்திருந்த டாப்ஸில் (மேலாடை) ராமர் பெயர் அச்சிடப்பட்டிருந்தது.

அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள், நீங்கள் அணிந்திருக்கும் உடையில் ராமர் பெயர் அச்சிடப்பட்டிருப்பது இந்து மதத்தினரின் மனதை புண்படுத்துவதுபோல் உள்ளது. ராமரை கடவுளாக வணங்குகிறோம்.

அவரது பெயரை இப்படி கவர்ச்சி உடையில் அச்சிட்டு பப்ளிசிட்டி தேடுவது கண்டனத்துக் குரியது உடனடியாக அந்த புகைப்படங்களை இணைய தளத்திலிருந்து அகற்றுங்கள் என்று தெரிவித்திருந்தனர். எதிர்ப்பு அதிகரிக்கத் தொடங்கியதும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து குறிப்பிட்ட படத்தை நீக்கினார். ஆனால் ஃபேஸ்புக்கில் இன்னமும் அப்படியே இருக்கிறது. அதையும் நீக்க வேண்டும் என கூறியிருக்கின்றனர்.

Related Stories: