நீ என் இடுப்ப பார்த்தே... நடிகருடன் தீபிகா லடாய்

தலைப்பை படித்தவுடன் குஷி படத்தில் ஜோதிகாவின் இடுப்பை பார்த்து விஜய் வாங்கிக்கட்டிக்கொள்ளும் சீன் ஞாபகம் வரும். ஆனால் அதுபோல் நிஜத்தில் நடந்திருக்கிறது. ரன்வீர் சிங், தீபிகா படுகோன் 7 வருடமாக காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். ஒருசில படங்களில் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். ஒரு முறை தீபிகா படுகோன் படப்பிடிப்பு தளத்தில் பட குழுவினருடன் காட்சி பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

அவரது பக்கத்தில் அமர்ந்திருந்த ரன்வீர், அக்கம் பக்கம் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டுகொள்ளாமல் தீபிகாவின் இடுப்பையே முறைத்து பார்த்தபடி இருந்தார். அதை கேமராமேன் புகைப்படம் எடுத்தார்.

ரன்வீரின் இந்த குறும்புத்தனம் பின்னர் தீபிகாவுக்கு தெரியவர, ‘ஏன் இடுப்பை பார்த்தீங்க..’ என்று கேட்க...’நான் பார்க்கலே..’ என்று ரன்வீர் கூற இருவருக்கும் லடாய் மூண்டது. பின்னர் அந்த புகைப்படத்தை தீபிகா நெட்டில் வெளியிட்டு, ‘7 வருஷமாச்சி இந்த மனுஷன் கொஞ்சமும் மாறலே... என் மீது உங்கள் பார்வை. உங்கள் மீது மற்றவர்கள் பார்வை..’ என நக்கலடித்திருந்தார்.

Related Stories: