தமிழில் தொடர்ந்து நடிப்பேன் - விஜய் தேவரகொண்டா

தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்து நோட்டா படத்தில் நடித்தவர், விஜய் தேவரகொண்டா. இதையடுத்து அவர் நடித்துள்ள டியர் காம்ரேட் தெலுங்கு படம், வரும் 26ம் தேதி தமிழிலும் வெளியாகிறது. இது குறித்து அவர் கூறியதாவது: நோட்டா படம் ரிலீசான பிறகு தமிழிலும் எனக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர். எனவே, தொடர்ந்து தமிழில் நடிக்க விரும்புகிறேன்.

ஆனால், தமிழில் சரளமாகப் பேச முடியாமல் அவதிப்படுவதால், உடனே தமிழ் கற்றுக்கொள்ள முயற்சித்து வருகிறேன். நோட்டா படத்தில் நடிக்கும்போது, அடுத்த நாள் படப்பிடிப்பில் எந்தெந்த காட்சி படமாக்கப்படுகிறதோ, அதற்கான வசனங்களை வாங்கிச் சென்று படித்து மனப்பாடம் செய்துகொள்வேன். இப்போது முக்கியமான சில தமிழ் படங்களை பார்க்க ஆரம்பித்துள்ளேன். விஜய் சேதுபதியின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் இணைந்து நடிக்க ஆசை.

Related Stories: