தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டி வெயில் சுட்டெரித்தது

சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்து போயினர். மேலும் தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது. சேலம், திருப்பத்தூரில் தலா 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. தருமபுரி, கரூர் பரமத்தியில் தலா 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. திருத்தணி, வேலூர், நாமக்கல்லில் தலா 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது. திருச்சி, மதுரை விமான நிலையம் தலா 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.

தமிழக உள் மாவட்டங்களில் மாவட்டங்களில் 27.04.2024 முதல் 1.05.2024 வரை அதிகபட்ச வெப்பநிலை 3-5 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 39-42 செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35-39 செல்சியஸ் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

27.04.2024 முதல் 01.05.2024 வரை அடுத்த ஐந்து இனங்களில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, வெப்ப நிலை மற்றும் ஈரப்பதம் அதிகம் இருக்கும் பொழுது ஒரு சில இடங்களில் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் வெப்ப அலை வீசுவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், குழுந்தைகள் மற்றும் கால்நடைகளை வெளியே அழைத்து வருவதை தவிர்க்குமாறும் மருத்துவர்கள் பலர் அறிவுறுத்துகின்றனர். இந்த வெப்பத்தில் இருந்து தப்பிக்கவும், முன்னெச்சரிக்கையாகவும் பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்

The post தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டி வெயில் சுட்டெரித்தது appeared first on Dinakaran.

Related Stories: