ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் சாடால் முதன்மை பள்ளி மாணவர்கள் வனப்பகுதியில் படிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 14ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டதில் பள்ளி கட்டிடம் சேதமடைந்தது. இதனையடுத்து உதம்பூர் துணை ஆணையாளர் ரவீந்தர் குமார் ஜிதேந்திர சிங்கிடம் கூறியுள்ளார். ரவீந்தர் குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியபிறகு, உடனடியாக பள்ளிக்கூடம் வேறு கட்டிடத்திற்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மற்றும் அதே நேரத்தில் புதிய கட்டிடத்திற்கான கட்டுமான செயல்பாடும் தொடங்கப்பட்டுள்ளது என்று உதம்பூர் எம்.பி. மற்றும் மத்திய அமைச்சரான டாக்டர்.ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் பள்ளி கட்டிடம் சேதமடைந்ததால் வனப்பகுதியில் படிக்கும் மாணவர்கள்
